Site icon Tamil News

இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த ட்ரோன் நிறுவனம்!

Drone Startup Garuda Aerospace இலங்கையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இது 50 நாடுகளில் நிறுவனத்தின் பிரசன்னத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட குளோபல் கருடா முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்னிஷ்வர் ஜெயப்பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ட்ரோன் கொள்கைகள் இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாலும், சுற்றுலா துறை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களாலும் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளதாக சென்னையை சேர்ந்த அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் பாரம்பரியமாக ஒரு துல்லியமான விவசாய ட்ரோன் நிறுவனம். இந்த ஆண்டு, வருவாய் ரூ. 100 கோடியைத் தொட்டதைக் கண்டோம், குறிப்பாக எங்கள் துல்லியமான விவசாய ட்ரோன்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக கவனம் வருவதைக் கண்டோம். எனவே இது சரியான நேரம் என்று நாங்கள் உணர்ந்தோம் என நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

ங்கை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால், அதன் வளரும் ட்ரோன் ஒழுங்குமுறை மற்றும் சிறிய சந்தை மற்ற பிராந்தியங்களுக்குச் செல்வதற்கு முன் எங்களுக்கு சரியான ஏவுதளமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version