Site icon Tamil News

சிங்கப்பூர் வங்கி கட்டமைப்பிற்கு காத்திருக்கும் நெருக்கடி

சிங்கப்பூரின் வங்கி கட்டமைப்பு அதிக அபாயத்தை எதிர்நோக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பண மோசடி அபாய மதிப்பீட்டு அறிக்கையை உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் நாணய வாரியம், நிதியமைச்சு ஆகியவை வெளியிட்டன.

வங்கிகள் அதிக அளவில் பரிவர்த்தனைகளைக் கையாள்வதால் அவை மோசடி அபாயத்துக்கு மேலும் இலக்காவதாக அறிக்கை தெரிவித்தது.

அதிக ஆபத்துள்ள இடங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வருவதும் அதற்குக் காரணமாகும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அபாய மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அறிக்கை ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டது.

வெளிநாட்டில் தளம் கொண்டுள்ள குற்றச்செயல் கும்பல்களின் மோசடி நடவடிக்கைகள் முக்கிய மிரட்டலாய் விளங்குகின்றன.

புதிய அபாயங்களும் உருவாகியிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. மின்னிலக்கக் கட்டணச் சேவை வழங்குநர்கள், ரத்தினக் கல், உலோக வியாபாரிகள் ஆகியோரிடமிருந்தும் மிரட்டல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version