Site icon Tamil News

இந்திய கிரிக்கெட் முகாமையாளர் ஒருவர் நீதிமன்றம் அழைப்பாணை

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற “லெஜண்ட் டிராபி 2024” சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பணத்திற்காக வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய கிரிக்கெட் முகாமையாளர் யோகி பட்டேலை எதிர்வரும் 14 ஆம் திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரில் கிரிக்கெட் வீரர்களை பணத்திற்காக ஏமாற்றியமைக்கு எதிராக தெற்காசியாவிலும் இலங்கையிலும் சுமத்தப்பட்டுள்ள முதலாவது குற்றப்பத்திரிகை வழக்கு எதிர்வரும் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என விளையாட்டு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்ததை அடுத்து நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க, வீரருக்கு செல்வாக்கு செலுத்தியதாக குற்றஞ்சாட்டி, முறைகேடு தடுப்புச் சட்டம் 2019 இலக்கம் 24 இன் கீழ், சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version