Site icon Tamil News

இலங்கையில் பூமிக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட நகரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று பொலன்னறுவை தொல்பொருள் தளத்திற்கு சொந்தமானவைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ஜிபிஆர்எஸ் எனப்படும் தனித்துவமான இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது, மேலும் அந்த இயந்திரம் பூமியை சுமார் ஐந்து மீட்டர் ஆழத்தில் ஆராயும் திறன் கொண்டது. புராதன நகரமான பொலன்னறுவை அடிப்படையில் பல முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version