Site icon Tamil News

ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் குறைந்த அம்சங்களைக் கொண்ட அடிப்படை கையடக்க தொலைபேசிகளுக்குத் திரும்புவதாக தெரியவந்துள்ளது.

அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதிகளை மட்டுமே கொண்ட இந்த தொலைபேசிகளில் இணையத்தை அணுகும் வசதி இல்லை.

கடந்த ஆண்டு இந்த வகை கையடக்க தொலைபேசிகளின் விற்பனை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 2022ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த கையடக்க தொலைபேசிகளில் 8.2 சதவீதம் குறைந்த வசதிகள் கொண்ட கையடக்க தொலைபேசிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசிகளில் பெரும்பாலானவை பெற்றோர்களால் வாங்கப்பட்டதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சாதாரண தொலைபேசிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஓய்வுபெற்ற ஆஸ்திரேலியர்களும் நீண்ட நேரம் இணையத்தில் இருந்து விலகி இருக்க இந்த வகையான சாதாரண போன்களின் பக்கம் சாய்வது தெரியவந்துள்ளது.

நாளொன்றுக்கு 02 மணித்தியாலங்களுக்கு மேல் கையடக்க தொலைபேசிகளுடன் நேரத்தை செலவிடுவதனால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு உயர் மட்டத்தில் இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version