Site icon Tamil News

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜெர்மனியில் பாடசாலைகளில் இருந்து முற்று முழுதான கல்வி ஒன்றை நிறைவு செய்யாமல், வெளியேறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் பாடசாலைகளில் கல்வியை முழுமையாக நிறைவு செய்யாமல் அதிகமான மாணவர்கள் வெளியேறுவது புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

அதாவது 2022 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது மொத்த மாணவர் தொகையில் 6.9 சதவீதமாக காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இவ்வாறு பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வியை முற்றாக நிறைவு செய்யாமல், இடையிலேயே நிறுத்துபவர்களின் எண்ணிக்கையானது 47500 சதவீதமாகவும், மொத்த மாணவர்கள் தொகையில் 6.2 சதவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு மொத்த மாணவர்களின் தொகையானது மொத்த மாணவர்களின் தொகையானது 5.9 சதவீதமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு பாடசாலைக் கல்வியை முற்றாக நிறைவு செய்யாமல் இடையில் விலகியவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவும், மொத்தமாக இவ்வாறான மாணவர்களின் தொகை 75000 ஆக இருந்ததாக தெரியவந்துள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது பாடசாலைகளின் தரங்களையும், பாடசாலை மாணவர்களுடைய கற்கை நெறிகளையும் இலகுவாக்கி, பாடசாலைகளில் கல்வி கற்விப்பதற்காக ஊக்கு விப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version