Site icon Tamil News

04 வகை சூறாவளியாக வலுப்பெற்றுள்ள பேரழிவு புயல் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புளோரிடாவின் வடமேற்குப் பகுதிகளில் “பேரழிவு” புயல் எழுச்சி ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சூறாவளியானது  (ஹெலேன் ) ஒரு வகை 4 சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. காற்றானது 130ph (209 ph) க்கும் அதிகமாக இருக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளி ஒரே இரவில் கரையைக் கடக்கும் போது திடீர் மழை மற்றும் வெள்ளம் ஏற்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது மெக்சிகோ வளைகுடாவை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 120மைல் (195 கிமீ) வேகத்தில் வீசியதாக வானிலை சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version