Site icon Tamil News

ஒலிம்பிக் வீரருக்கு எருமை மாடு பரிசு

ஒலிம்பிக் ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 02 வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலமாக ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.

இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 62 ஆவது இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரூபா ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனாரான முகமது நவாஸ் என்பவர் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்.

அவர்களின் ஊரில் ‘எருமை மாடு’ என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகின்றது.

‘மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கின்றார்’ என்று அவரது மாமனார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நவாஸின் மகளான ஆயீஷா என்பவரையே அர்ஷத் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 02 மகன்களும் 01 மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version