Site icon Tamil News

அமெரிக்காவில் முறைகேடு குறித்து தகவல் வழங்கியவருக்கு 279 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டது!

அமெரிக்காவில் முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை  அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர்,  இந்த ஆணைக்குழுவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய சன்மானம் இதுவாகும் எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இதுபோன்று ஊழலை அம்பலப்படுத்தியமைக்காக ஒருவருக்கு  ஆகக்கூடுதலான வெகுமதியாக 114 மில்லியன் டொலர்கள் 2020 ஒக்டோபரில் வழங்ப்பட்டிருந்தன.

அத்தொகையைவிட இரு மடங்குக்கும் அதிகமான வெகுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு உதவியதாக அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version