இலங்கை

ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு கோரிக்கை!!

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1977ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரை எமது மூதாதேயர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக தங்களது வயல் காணிகளையும் வீடுகளையும் விட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தஞ்சம் புகுந்து மீண்டும் சில காலங்களுக்கு பின்னர் வருகை தந்தோம் எனவும் பாதிப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் மகிந்த திட்டத்தின் கீழ் மகநெகும கமநெகும ஆகிய இரண்டு திட்டங்களின் ஊடாக சின்ன புளியங்குளம்,பெரிய புளியங்குளம் ஆகிய இரண்டு குளங்களுஙபுணரமைப்பு செய்யப்பட்டதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆனாலும் எங்களது கிராமத்தை சூழவுள்ள குபுக்வெவ-கெமராவ,
மெதவெவ போன்ற இடங்களில் விவசாயிகள் பயிர் செய்கை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் புளியங்குளம் பகுதியிலுள்ள விவசாய காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது தங்களது காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பல அரசியல் வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இன்றுவரைக்கும் எதுவித நடவடிக்கை எடுக்க வில்லையெனவும் குறிப்பிடுகின்றன.

ஆகவே எங்களது விவசாய காணிகளை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!