இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!

திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!