ஐரோப்பா

EU வில் பிரித்தானியா சேர நினைத்தால் அதன் மறுப்பிரவேசம் துரிதப்படுத்தப்படும்!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர முடிவு செய்தால் அதன் மறுப்பிரவேசம் விரைவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றக் கூட்டத்திற்கான ஐரோப்பிய தூதுக்குழுவின் தலைவர் சாண்ட்ரோ கோசி (Sandro Gozi), ஐக்கிய இராச்சியம் மீண்டும் சேருவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் “ஐரோப்பிய திட்டத்திற்கான ஒரு பெரிய வெற்றியாக” கருதும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதன் சேர்க்கை விரைவுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting ) பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பேரழிவு என விமர்சித்து, பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வாதம் எழுந்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!