லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை
தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் எஸ்-ஸஹ்ரானி, அல்-ஷர்கியா, தௌயிர், குலைலா, ஸோமோர், ஜிப்தின், நபாத்தியா அத்-தாஹ்தா, அரப் சலீம் மற்றும் கஃபர் ஜௌஸ் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் அடங்குகின்றன.





