கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 33 கப்பல்கள் பயணம்
கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 33 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





