இந்தியா

இந்தியாவில் கடும் வெப்பம் – 02 நாட்களில் 40 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 02 நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பல நகரங்களில், சிலவற்றில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.

அதிக வெப்பநிலை நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும், இது இரத்த உறைவுக்கும், மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே, தெலங்கானா மாநில அரசு, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே தலைநகர் புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இந்த வாரம் முழுவதும் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதால், வரலாறு காணாத மின்சார நுகர்வு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!