இலங்கை ரூபாவின் மதிப்பில் திடீர் மாற்றம்!
கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை 2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு நிதி கிடைக்கவுள்ள நிலையில், சந்தையிலுள்ளவர்கள் தங்களிடமுள்ள டொலர்களை விற்பனை செய்ய முற்பட்டதே ரூபாய் வலுவடைந்தமைக்கு காரணமாக கூறப்படுகிறது.





