கொழும்பில் களமிறங்கியுள்ளனரா FBI குழுவினர்?
விசாரணையின் நிமித்தம் FBI சிறப்புக் குழுவினர் எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக FBI அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தியை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில்,
“ பல நாடுகளில் உள்ள வழக்கமான நடைமுறையைப் போலவே, கோரிக்கை விடுக்கப்படும்போது, அந்தந்த நாட்டுத் தரப்பினருடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்க தூதரகத்தில் FBI சட்டத் தூதுவர் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.
மாறாக வேறு சிறப்புக் குழுவினர் யாரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.




