வெள்ளை மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!! ஒருவர் பலி!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று பிற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளை மாளிகையின் பிரதான பாதுகாப்பு வலயத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், வளாகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




