Site icon Tamil News

8 நாள் விண்வெளிப் பயணம் 8 மாதங்களாகும் அபாயம் – விண்வெளியில் சிக்கிய இருவர்

அமெரிக்காவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் 8 நாள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பயணத்தில் எதிர்பாராத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்று NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேரி வில்மோரும், சுனிதா வில்லியம்ஸும் இவ்வாண்டு ஜூன் 5ஆம் திகதி விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இரு மாதங்கள் ஆகியும் இருவரும் பூமிக்குத் திரும்பவில்லை. அவர்கள் பயணம் மேற்கொண்ட விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது.

அவர்கள் பூமிக்குத் திரும்ப அந்தக் கலம் பாதுகாப்பானது அல்ல என்று கருதப்பட்டால் அவர்கள் மாற்று வழிகளை ஆராய வேண்டும்.

இதுவரை அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று NASA அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

Exit mobile version