Site icon Tamil News

69வது Filmfare Awards – பல விருதுகளை தட்டித்தூக்கிய சித்தா…

69வது SOBHA Filmfare Awards South 2024 நேற்று அதாவது ஆக்ஸ்ட் 3ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள JRC கன்வென்ஷன் சென்டரில் தென் திரைப்படத் துறையினரை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் சினிமாத் துறையில் திறமைகளால் முத்திரை பதித்த நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் நடத்தப்பட்டது.

69வது SOBHA Filmfare Awards South 2024 இல் மொத்தம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் 15 கேட்டகிரியின் கீழ் 16 விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் சித்தா படத்தினைப் போலவே பொன்னியின் செல்வன் படமும் விருதுகளை அள்ளிக்குவித்தது. அதன் விபரத்தைக் காணலாம்.

சிறந்த படம் – சித்தா
சிறந்த இயக்குநர் – சு அருண் குமார் (சித்தா)
சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்’) விடுதலை: பகுதி 1 (வெற்றி மாறன்)
முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்) விக்ரம் (பொன்னியின் செல்வன்- பாகம் 2)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள்’) சித்தார்த் (சித்தா)
முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்) நிமிஷா சஜயன் (சித்தா)
சிறந்த நடிகை (விமர்சகர்கள்’) ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அபர்ணா தாஸ் (தாதா)
துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) ஃபஹத் பாசில் (மாமன்னன்)
துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்) அஞ்சலி நாயர் (சித்தா)
சிறந்த இசை ஆல்பம் திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)
சிறந்த பாடல் வரிகள் இளங்கோ கிருஷ்ணன் (அக நக- பொன்னியின் செல்வன் பாகம் 2)
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) ஹரிச்சரண் (சின்னஞ்சிறு நிலவே- பொன்னியின் செல்வன் பாகம் 2)
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) கார்த்திகா வைத்தியநாதன் (கண்கள் ஏதோ- சித்தா)
சிறந்த ஒளிப்பதிவு ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பாகம் 2)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு தோட்ட தாரணி (பொன்னியின் செல்வன் பாகம் 2)

Exit mobile version