Site icon Tamil News

மைக்ரோசாப்ட் – ன் லிங்க்டு இன் நிறுவனத்தின் 668 பணியாளர்கள் நீக்கம்!

டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருவதன் வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது லிங்க்டு இன் நிறுவனத்தின் 668 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் சரிவைக் கண்டிருந்த பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் அவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு அமேசான், மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்களின் வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்தது. சுமார் 10 ஆயிரம் பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யப்போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. இந்த ஆட்குறைப்பினை, லிங்க்டு இன் போன்ற தனது இதர நிறுவனங்களிலும் அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்த வகையில் சமூக வலைதள தொழில் நுட்ப நிறுவனமான லிங்க்டு இன் பணியாளர்களில் 668 பேர் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. லிங்க்டு இன் நிறுவனத்தில் இது இரண்டாவது ஆட்குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பணிநீக்கம் என்பது மொத்த ஊழியர்களில் 2.5% பேர் ஆவார்கள். உற்பத்தி, திறன், நிதி மற்றும் பொறியியல் பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு அமைந்திருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே லிங்க்டு இன் நிறுவனத்தின் வருவாய் இறங்குமுகத்தில் இருந்ததால், செலவினத்தை குறைக்கும் முயற்சியில் ஆட்குறைப்பு அமலாகிறது. மேலும் புதிதாக பணிக்கு ஆளெடுப்பதும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

டெல் நிறுவனங்களில் இந்த அதிரடியால், அவற்றை இலக்காக கொண்டு படித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கும் இளம் தலைமுறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். டெக் நிறுவனங்களின் ஆட்குறைப்பு இன்னும் எத்தனை காலாண்டுகளுக்கு தொடரும், எப்போது புதிதாக ஆளெடுக்கத் தொடங்குவார்கள் என்பது உள்ளிட்ட ஐயங்கள் அவர்களை சூழ்ந்துள்ளன.

Exit mobile version