Site icon Tamil News

உலகளவில் அதிக எடையால் அவதிப்படும் 650 மில்லியன் மக்கள் : ஆய்வில் வெளியான தகவல்!

உலக உடல் பருமன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 கொண்டாடப்படுகிறது.

இதன்படி உலகின் முதியோர் சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக எடையால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

குறிப்பாக 650 மில்லியன் பேர் உடல் பருமனால் அவதிப்படுவதாக இலங்கையின்  தேசிய நீரிழிவு மையத்தின் பிரதிப் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதாகவும், இதனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே உலக மக்கள்தொகையில் 39.% பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் அவர்களில் 13% பேர் உடல் பருமனாகவும் உள்ளனர்.   “இலங்கையைப் பொறுத்தவரை, சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, தொற்று அல்லாத நோய்களுக்கான ஆபத்து குழுக்களை அடையாளம் காண ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு சோதனை நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.

Exit mobile version