Site icon Tamil News

கண்டியில் 65 மணிநேர நீர் வெட்டு – நீரை சேமிக்க அறிவுறுத்தல்

பொல்கொல்ல வடிகால் அணையின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக கண்டியின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (28) அதிகாலை 1 மணிக்கு நீர்வெட்டு ஆரம்பமாகி, திங்கட்கிழமை (30) காலை 6 மணிக்குள் சீரமைக்கப்படும்.

பாதிக்கப்படும் பகுதிகள் –

கண்டி மாநகரசபை பகுதி, ஹரிஸ்பத்துவ, புஜாபிட்டிய, பாததும்பர, மற்றும் அக்குரண நீர் விநியோக அமைப்பின் கீழ் உள்ள பகுதிகள்.

ராஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தானை, மற்றும் வளல உள்ளிட்ட குண்டசாலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

பெரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (GKWTP) திட்டத்தின் கீழ் மாவத்தகம பிரதேசங்கள்.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் குறுக்கீட்டின் போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version