Site icon Tamil News

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் மரணம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினுக்கு அருகிலுள்ள காஃப்ர் டான் கிராமத்தில் இஸ்ரேலியப் படைகள் ஆறு பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய சிறப்புப் படைப் பிரிவு கிராமத்திற்குள் நுழைந்து ஷெல் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஒரு வீட்டை முற்றுகையிட்டதாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட ஆறு பேரும் 21 முதல் 32 வயதுடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவரான அஹ்மத் ஸ்மூடி, 2022 இல் ஜெனினில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது குழந்தையின் சகோதரர் ஆவார்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படையணியின் ஜெனின் பட்டாலியன் காஃப்ர் டானில் இஸ்ரேலிய துருப்புக்களுடன் “கடுமையான” சண்டையில் ஈடுபட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவம் கிராமத்தில் ஒரு “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், நான்கு ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகவும் கூறியது. தாக்குதலில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்தது.

Exit mobile version