Site icon Tamil News

ஜெர்மனியில் 6 நாட்கள் வேலை? மக்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க திட்டம்

ஜெர்மனியில் 4 நாட்கள் வேலை என்ற விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையில் அதில் மாற்றம் மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தற்பொழுது 6 நாட்கள் வேலை தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அவதானிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் கிழமைக்கு 4 நாட்கள் வேலை செய்கின்ற ஒரு புதிய திட்டத்தை சில நிறுவனங்கள் அமுல்படுத்துவதற்கு சில பரிட்சார்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந் நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDU CSE கட்சியானது ஜெர்மன் நாட்டில் கிழமைக்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகம்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அதாவது இந்த மாத ஆரம்பத்தில் இருந்து கிரேக்க நாட்டில் அந்த நாட்டில் உள்ள பணியாளர்கள் விரும்பினால் கிழமைக்கு 6 நாட்கள் வேலை செய்ய முடியும்.

இவ்வாறு கிழமைக்கு 6 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பயிற்றப்பட்ட பணியாளர்களின் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும் என்று கிரேக்க நாடு நினைத்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் பல லட்சக்கணக்கான பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

இந்த பற்றாகுறையை நிவர்த்தி செய்வதற்கு கிழமைக்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைக்கடுத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர் கட்சி வேண்டுதலை விடுத்துள்ளது.

Exit mobile version