Site icon Tamil News

IPL ஏலத்தில் 68 கோடிக்கு வாங்கப்பட்ட 6 ஆஸ்திரேலிய வீரர்கள்

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்குகிறது.

இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன.

இதனையடுத்து கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். இவரை கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

மற்ற நாட்டு வீரர்களான நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசஃப் ரூ.11.50 கோடிக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.75 கோடிக்கும் ஏலம் எடுத்தது.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் 42 பேர் ஏலம் போன மொத்த தொகை ரூ. 79.45 கோடி. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் மட்டும் ஏலம் போனது 68.05 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.

Exit mobile version