Site icon Tamil News

உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்கள் – முதலிடத்தை தக்க வைத்த மஸ்க்

உலகின் மிகப் பெரிய 500 பணக்காரர்களின் ஒட்டுமொத்தச் செல்வம் இவ்வாண்டு 1.5 டிரில்லியன் டொலர் கூடியுள்ளது.

Bloomberg செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பணவீக்கமும் அதிகமான வட்டி விகிதமும் பிரச்சினையாக இருந்தாலும், தொழில்நுட்பத் துறையில் பங்கு விலைகள் அதிகரித்தது பணக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தது.

தொழில்நுட்பத் தொழிலதிபர்களின் செல்வம் 48 சதவீதம் கூடியதாக Bloomberg கூறியது.

அவர்களில் Tesla, SpaceX நிறுவனர் எலன் மஸ்க் மட்டுமே, கூடுதலாக 95.4 பில்லியன் டொலர் செல்வம் சேர்த்தார்.

அவர் இவ்வாண்டின் மிகப் பெரிய செல்வந்தராகியுள்ளார். மஸ்கின் மொத்தச் சொத்து மதிப்பு 232 பில்லியன் டொலராகும்.

அது இரண்டாம் பெரிய செல்வந்தரும் LVMH Moët Hennessy Louis Vuitton நிறுவனருமான பெர்னர்ட் ஆர்னால்ட்டின் (Bernard Arnault) சொத்து மதிப்பை விட 50 பில்லியன் டொலர் அதிகமாகும்.

Exit mobile version