Site icon Tamil News

49 சதவீத அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் செயலற்றுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில், பொதுச் சேவை அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்களில் 49%, அதாவது பாதியளவு செயலற்ற எண்கள் எனத் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் பதியப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தமது கடமைகளை மேற்கொள்ளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கங்களை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகமும் கருத்தில் கொள்ளப்பட்டது, தொடர்புடைய எண்கள் பயன்பாட்டில் உள்ளதா?  இலக்கத்திற்கு அழைப்பெடுக்கும் போது பதில் வழங்கப்படுகின்றதா? என கணக்கெடுக்கப்பட்ட 589  தொலைபேசி எண்களில் 286, அதாவது 49%, செயலற்ற எண்கள்.

இதற்கிடையில்,  தொலைபேசி எண்ணில் 22% செயலில் உள்ளது, ஆனால் பதிலளிக்கவில்லை என்று கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது, அதே நேரத்தில் அழைப்புகளுக்கு பதிலளித்தவர்களின் சதவீதம் 29% ஆகும்.

Exit mobile version