Site icon Tamil News

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் உயிரிழப்பு – ரஷ்யா!

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும்,  ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது , அலெக்சாண்டர் குரென்கோவ் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.

டினிப்ரோ ஆற்றின் ரஷ்ய ஆக்கிரமிப்புக் கரையில் உள்ள அணை ஜூன் 6 அன்று உடைந்ததில் குறைந்தது 52 பேர் இறந்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவும் உக்ரைனும் அழிவுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டின, இருப்பினும் மேற்குலகம் இந்த தாக்குதலுக்குப் பின்னால் மொஸ்கோ இருப்பதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version