Tamil News

பிக்பாஸ் சீசன் 7இல் களமிறங்கும் கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக பக்கா பிளான்..

வரும் அக்டோபர் எட்டாம் தேதி துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புதுப்புது அப்டேட் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. அந்த வகையில் சீசன் 7ல் நான்கு கதாநாயகிகளை விஜய் டிவி களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

ஏனென்றால் மற்ற சீசன்களை காட்டிலும் சீசன் 7 வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த முறை இரண்டு வீடுகளை தயார் செய்து வைத்துள்ளனர் புதிய பழைய போட்டியாளர்களை கலந்து தரையிறக்க போகின்றனர்.

ஏற்கனவே செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா நாயர் உள்ளிட்டோர் தேர்வான நிலையில், இப்போது விஜய் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் நான்கு ஹீரோயின்சை தேர்வு செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

விஜய் டிவியின் தொகுப்பாளினியும் தேன்மொழி பிஏ பிஎல் என்ற சீரியலின் கதாநாயகிமான ஜாக்குலின் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார். அதே போலவே தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி கேரக்டரில் நடிக்கும் கதாநாயகி நட்சத்திரா பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

இவர்கள் மட்டுமல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் தன்னுடைய உச்சகட்ட வில்லத்தனத்தை காட்டிய வெண்பா கேரக்டரில் நடித்த நடிகை பரீனா மற்றும் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தி நடித்த விஜே அர்ச்சனாவும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகின்றனர்.

இவ்வாறு மற்ற சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் பெண்கள் தான் அதிகம் இடம் பெற்று தரமான சம்பவத்தை செய்யப் போகின்றனர். இதில் விஜி அர்ச்சனா மற்றும் ஜாக்லின் இருவருக்கும் காதல் மலர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களுடன் இன்னும் யார் யார் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version