Site icon Tamil News

காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட 37 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மத்திய ஆபிரிக்க நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூன்று அமெரிக்க குடிமக்கள், பெல்ஜிய பிரஜை ஒருவர் மற்றும் கனேடியர் ஒருவரும், பிரித்தானியர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

பயங்கரவாதம், கொலை மற்றும் கிரிமினல் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகளுக்கு 05 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் தொடங்கிய விசாரணையில் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மே மாதம், அதிகம் அறியப்படாத எதிர்க்கட்சி பிரமுகரான கிறிஸ்டியன் மலங்கா தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது 6 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version