Site icon Tamil News

30 ஆண்டுகளாக தொடரும் ஆச்சரியம் – புது வகையான சாதனை படைத்த ஜப்பான் விமான நிலையம்

ஜப்பானின் கான்சாய் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு பயணப் பெட்டி கூடத் தொலைந்து போகவில்லை என தெரியவந்துள்ளது.

உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக பெயரிட்டுக்கொள்ள போட்டி நடைபெறும் இந்தக் காலத்தில் ஜப்பானின் விமான நிலையம் புது வகையான சாதனையைப் படைத்துள்ளது.

கான்சாய் விமான நிலையம் 1994ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து எந்தப் பயணப் பையும் தொலைந்து போகவில்லை என்று விமான நிலையம் அதன் ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

கான்சாய் விமான நிலையத்திற்கு ஆண்டுக்குச் சராசரியாக 20-லிருந்து 30 மில்லியன் பயணிகள் வந்து செல்வதாக அறிக்கைகள் கூறுகின்றது.

இந்தச் செய்தி பயணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தாங்கள் அதனைப் பெரிய சாதனையாகக் கருதவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பான ஒன்றைச் செய்வது போன்ற உணர்வு தங்களுக்கு இல்லை என்று விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறினார். அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளையே செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version