Site icon Tamil News

சீனாவில் 104 நாட்கள் தொடர்ந்து வேலை – நபருக்கு நேர்ந்த கதி – சிக்கலில் நிறுவனம்

சீனாவில் நபர் ஒருவர் 104 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 1 நாள் விடுப்பு மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த நபரின் மரணத்திற்கு நிறுவனம் 20 சதவீதம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் அவரது உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதாக நீதிமன்றம் அறிந்தது.

உயிரிழந்த நபரின் பெயர் குறிப்பிடப்படாத நிறுவனத்தில் சாயம் பூசும் வேலையில் பணிபுரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சீனாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஸெஜியாங் மாநிலத்தில் அவர் வேலைக்கு அனுப்பப்பட்டார்.

அவர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்தார்.

இடையில் அவருக்கு ஏப்ரல் 6ஆம் திகதி மட்டும் ஒய்வு விடுப்பு வழங்கப்பட்டது. மே மாதம் அவருடைய உடல்நலம் பாதிக்கப்படத் தொடங்கிய நிலையில் ஜூன் முதலாம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

நிறுவனம் அவருடைய குடும்பத்திற்கு 56,000 டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version