Site icon Tamil News

YouTubeஇல் அறிமுகமாகும் 3 முக்கிய AI அம்சங்கள்

யூடியூப் தளம் 3 பெரிய ஏ.ஐ அம்சங்களை சோதனை செய்து வருகிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஏ.ஐ வசதியை சோதனை செய்கிறது. 3 பெரிய ஏ.ஐ அப்கிரோடுகளை செய்ய உள்ளது. நீளமான வீடியோக்களுக்கான navigation, கமெண்ட்ஸ், கேள்வி எழுப்புதல் ஆகிய அம்சங்களை கொண்டு வர உள்ளது.

Skip to the good parts

இந்தச் சோதனை அம்சம், மக்கள் வீடியோக்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து, compelling segments-களைத் தானாக அடையாளம் காண முடியும். வீடியோ Forward செய்ய Double- tap செய்யும் போது ஒரு பட்டன் வரும். அது உங்களுக்கு ஏ.ஐ-ல் தீர்மானிக்கப்பட்ட சுவாரஸ்யமாக இருக்கும் highlighted section பகுதிக்கு கொண்டு செல்லும்.

Categorised comments

மற்றொரு ஏ.ஐ சோதனையானது தீம் மற்றும் தலைப்புகளில் நீண்ட வீடியோக்களில் கருத்துகளை ஒழுங்கமைப்பதை உள்ளடக்கியது. இந்தக் கருவி படைப்பாளர்களுக்கு அவர்களின் பார்வையாளர்கள் என்ன விவாதிக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது, இது உரையாடல்களில் இணைவதை எளிதாக்குகிறது அல்லது பார்வையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் புதிய content யோசனைகளை உருவாக்குகிறது.

கேள்விகளுக்கு பதிலளிக்க ஏ.ஐ சாட்போட்

வீடியோக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க AI சாட்போட் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது வீடியோ ப்ளே ஆகி வரும் போது சந்தேகேங்கள் ஏதும் இருந்தால் குறிப்பாக கல்வி தொடர்பான வீடியோக்களுக்கு “Ask” என்ற பட்டன் இருக்கும். இதை கிளிக் செய்து கேள்வி கேட்கலாம். அதில் பதில்கள், quizzes மற்றும் வீடியோ தொடர்பான பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Exit mobile version