உலகம் செய்தி

2025ஆம் ஆண்டுக்கான பிரபல சொல்லால் எழுந்துள்ள சர்ச்சை! மனிதகுல நம்பிக்கைக்குச் சவால்

2025 ஆம் ஆண்டுக்கான சொல்லாக (Word of the Year) ‘6-7’ என்பதை ஆங்கில அகராதி இணையத்தளமான Dictionary.com தெரிவு செய்துள்ளது.

பிரபல கூடைப்பந்து வீரரின் உயரத்தைக் குறிக்கும் பாடல் ஒன்றின் வரியிலிருந்து உருவான இந்தச் சொல், இளைஞர்கள் மற்றும் Gen Alpha தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வெளியான “Doot Doot” என்ற பாடலின் வரிகளில் இந்தச் சொல் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடல் பிரபலத்தின் உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ‘6-7’ என்ற சொல்லை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

‘6-7’ என்ற சொல்லை வகுப்பறைகளில் மாணவர்கள் பயன்படுத்தியமையினால் பல அசௌகரியங்கள் ஏற்பட்ட நிலையில் சில ஆசிரியர்கள் அதற்குத் தடை விதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் Dictionary.com இன் நிலைப்பாட்டுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மனிதகுலத்தின் எதிர்காலத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டதாக பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பொதுவான ஒரு சொல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 30 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!