Site icon Tamil News

ஆஸி வாரியம் வெளியிட்ட 2023 கனவு டெஸ்ட் அணி.. 2 இந்தியர்களுக்கு இடம்

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடம் இந்தியா போன்ற அணிகளுக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ ஆஸ்திரேலியாவுக்கு மகத்தானதாக அமைந்தது என்றால் மிகையாகாது.

ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற அந்த அணி உலகக் கோப்பை ஃபைனலிலும் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் என்று தங்களை முடி சூடா அரசன் என்பதை மீண்டும் நிரூபித்தது.

இந்நிலையில் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 2023ஆம் ஆண்டு அசத்தலாக விளையாடிய வீரர்களை கொண்ட தங்களின் 11 பேர் கனவு அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த ஜாம்பவான்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பிடிக்கவில்லை.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தங்களுடைய வீரர் பட் கமின்ஸை அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வாரியம் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களாக 6 போட்டிகளில் 608 ரன்கள் குவித்த இலங்கையின் திமுத் கருணாரத்னேவும் 13 போட்டிகளில் 1210 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

3வது இடத்தில் 7 போட்டிகளில் 696 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் நம்பிக்கை நாயகன் கேன் வில்லியம்சன் 4வது இடத்தில் 8 போட்டிகளில் 787 ரன்கள் குவித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 5வது இடத்தில் 8 போட்டிகளில் 701 ரன்கள் குவித்த மற்றொரு இளம் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் மற்றும் 6வது இடத்தில் 4 போட்டிகளில் 351 ரன்கள் எடுத்த அயர்லாந்தின் லார்கன் டுக்கர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

7வது இடத்தில் 281 ரன்கள் மற்றும் 33 விக்கெட்களை எடுத்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தில் 41 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக தங்கள் நாட்டைச் சேர்ந்த நேதன் லயனை விட அஸ்வின் தரமாக செயல்பட்டதால் முதன்மை ஸ்பின்னராக தேர்வாகியுள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது. மற்றபடி 20, 38 விக்கெட்களை எடுத்த தென்னாபிரிக்காவின் ககிஸோ ரபாடா இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

Exit mobile version