Site icon Tamil News

பாகிஸ்தான் புத்த கோவிலில் அகழ்வாராய்ச்சியின் போது 2000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானின் புத்த கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் அடங்கிய அரிய பொக்கிஷம் கண்டெடுக்கப்பட்டது. இந்த புதையலில் உள்ள பெரும்பாலான நாணயங்கள் தாமிரத்தால் செய்யப்பட்டவை, அவை புத்த கோவில் இடிபாடுகளின் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

இது மத்திய தென்கிழக்கு பாகிஸ்தானில் கிமு 2600-ல் பாரிய மொஹஞ்சதாரோ கால இடிபாடுகளில் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த புதையல் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஷேக் ஜாவேத் அலி சிந்தி கூறுகையில், மொஹஞ்சதாரோ வீழ்ச்சியடைந்து சுமார் 1600 ஆண்டுகள் ஆகிறது. அதன் பிறகு இடிபாடுகளில் ஒரு ஸ்தூபி கட்டப்பட்டது.அகழ்வாராய்ச்சியின் போது இந்த நாணயங்களை கண்டுபிடித்த குழுவில் ஷேக் ஜாவேத் என்பவரும் ஒருவர்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாணயங்களின் நிறம் முற்றிலும் பச்சையாக இருந்துள்ளது. ஏனெனில் தாமிரம் காற்றில் வெளிப்படும் போது நிறம் மாறும். பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்ட நிலையில் இந்த நாணயங்கள் உருண்டையான கல்லாக மாறியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதையலின் எடை சுமார் 5.5 கிலோ ஆகும்.

Exit mobile version