Site icon Tamil News

20-20 உலககோப்பை : பயிற்சி போட்டியில் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!

20-20 உலகக் கோப்பைக்காக நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்துள்ளது.

அயர்லாந்து டாஸ் வென்று இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தது.

அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணியால் 18 ஓவர்கள் 2 பந்துகளில் 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தசுன் ஷனக 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மகிஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் முதல் போட்டி தென்னாபிரிக்காவுக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

Exit mobile version