Site icon Tamil News

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால், ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக்கிலும் இந்த இருநாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் துவங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன் அமைதிப் பேச்சு வார்த்தையை ரஷ்யா துவங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால், அதனை ரஷ்யா ஏற்கவில்லை.

இதனால்தான், வேறு வழியில்லாமல் ரஷியாவை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதே காரணத்துக்காக பெலாரஸ் நாட்டையும் தடை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version