Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் 2.5 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டன!

தென்னாப்பிரிக்காவில் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது நுகர்வோருக்கு முட்டை பற்றாக்குறையை உருவாக்கும் என்பதுடன்.  ஏற்கனவே  மின்சார நெருக்கடியால் போராடி வரும் தொழில்துறையை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கவுடெங் மாகாணத்தில் அதிகளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சில மளிகைக் கடைகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version