Site icon Tamil News

இலங்கையை விட்டு வெளியேறிய 1700 வைத்தியர்கள் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்

இலங்கையில் நான்கு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 1700 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களில் கிட்டத்தட்ட 500 நிபுணர்கள் உள்ளனர். தரவு அறிக்கைகளின்படி 1655 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் கடந்த நான்கு வருடங்களில் 573 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 1082 வைத்தியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறிய அதிகளவான வைத்தியர்கள் எண்ணிக்கை 706 ஆகும். தரவு அறிக்கைகளின்படி, 2020 இல் 106 மருத்துவர்களும், 2021 இல் 259 மருத்துவர்களும், 2022 இல் 584 மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் சமூக அரசியல் அமைப்பில் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளனர்.

தற்போது ஒரு வைத்தியர் எழுநூற்று ஐம்பது நோயாளர்களை பரிசோதித்து வருவதாகவும், இதன் காரணமாக ஆரம்ப சுகாதார சேவை சீர்குலைந்துள்ளதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

Exit mobile version