Site icon Tamil News

141 நிறுவனங்கள் மற்றும் 300 நபர்கள் மீது புதிய தடைகளை விதித்த ஜெலன்ஸ்கி!

சிரிய  அதிபர் பஷார் அல்-அசாத் உட்பட 141 நிறுவனங்கள் மற்றும் 300 நபர்கள் மீது உக்ரைன் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய தடைகளை விதித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த உத்தரவில் கையெழுத்திட்ட அவர் இந்த அறிவித்தல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தடை உத்தரவில், சிரியாவின் பிரதம மந்திரி ஹுசைன் அர்னஸ் மற்றும் வெளியுறவு மந்திரி பைசல் மெக்தாத் ஆகியோரும், ரஷ்ய பிரஜைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தடை உத்தரவு 10 ஆண்டுகள் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று  சிரிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு உக்ரேனிய பெண்களையும் ஆறு குழந்தைகளையும் திருப்பி அனுப்பியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version