Site icon Tamil News

12 வயது சிறுமி துஷ்ப்ரயோகம் – கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பம்பாய் உயர் நீதிமன்றம் பாலியல் துஷ்ப்ரயோகத்திற்கு உள்ளான 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்துள்ளது.

இந்த தீர்ப்பு அவளுடைய நலன் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் சந்தீப் மார்னே மற்றும் நீலா கோகாய் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச்,கர்ப்பத்தை கலைக்க பரிந்துரைத்து மருத்துவ வாரியம் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்தது.

“சூழ்நிலையின் தேவைகளை மனதில் கொண்டு, சிறுமியின் நலன், இது மிக முக்கியமானது மற்றும் அவளது பாதுகாப்பு” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிறுமியின் 14 வயது சகோதரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த மாத தொடக்கத்தில், சிறுமி வயிற்று வலியால் தனது தாயிடம் புகார் அளித்தார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​கர்ப்பமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூத்த சகோதரர் தன்னுடன் வலுக்கட்டாயமாக உடல் உறவை ஏற்படுத்திக் கொள்வதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

தாயின் புகாரின் பேரில், மகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

“கர்ப்பம் தொடர்ந்தால் நோயாளியின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்தும் ஆகையால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Exit mobile version