Tamil News

400 கோடி வசூலை தொட்டதா கோட்?

ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் முதல் வாரத்தில் 4 நாட்களில் 288 கோடி வசூல் எனும் இமாலய இலக்கை எட்டி உலகளவில் வசூல் வேட்டை ஆடியது.

2வது வார இறுதியிலும் அதே வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு குவிந்த கலவையான விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூல் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.

தளபதி விஜய் படத்திற்கு எப்போதுமே கை கொடுக்கும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் இந்தளவுக்கு கை கொடுக்கவில்லை. கேரளாவில் நிலவி வரும் பிரச்சனை, ஆந்திராவின் வெள்ளம் போன்ற காரணங்களால் கோட் படத்தின் வசூல் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தயாரித்துள்ளது. தளபதி விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி எனக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்க காரணமே அனைத்து இடங்களிலும் தளபதியின் மார்க்கெட் பெரிதாக உயர்ந்து விட்டது என அர்ச்சனா கல்பாத்தி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால், கோட் படம் வெளியான பின்னர், தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸை தவிர்த்து இந்தியளவில் அந்த படத்தை யாருமே பெரிதாக கொண்டாடவில்லை என்றும் வசூல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்தியளவில் கோட் திரைப்படம் இதுவரை 212 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஓவர்சீஸ் வசூலை பொறுத்தவரையில் 150 கோடி ரூபாய் வரை வசூல் வந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக விஜய்யின் கோட் திரைப்படம் 11 நாட்களில் 360 முதல் 380 கோடி வரை உலகளவில் வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 14 கோடி மற்றும் 15 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியளவில் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர்.

கோட் படத்தின் முதல் வார கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டதை போல 2வது வார வசூல் அறிக்கையை அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version