Site icon Tamil News

100க்கும் மேற்பட்ட உயிருள்ள பாம்புகளை கடத்தியவர் கைது

சீனாவில் 100க்கும் மேற்பட்ட உயிருடன் இருந்து பாம்புகளைக் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயன்ற அந்த நபர் டேப் சுற்றப்பட்ட ஆறு பைகளை சீல் செய்து தனது காற்சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தார்.

இதன்போது அவரின் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.

மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக தரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று தெரிக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய மையமாக சீனா இருந்து வருகிறது. எனினும், நாட்டின் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு சட்டங்கள் அனுமதியின்றி அந்த நாட்டின் பூர்வீகமற்ற உயிரினங்களை நாட்டிற்குள் கொண்டு வரத் தடை விதித்திருக்கிறது.

இந்நிலையில், இதுபோன்று சட்டத்தை மீறி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சீன சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version