Site icon Tamil News

மணிப்பூர் கலவரம் தொடர்பில் 10 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3ம் திகதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர்.

கடும் வெயிலிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் , திரிணாமுல் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் , ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் , ஜே.டி.யு உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அணைத்து சமுதாய மக்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.மணிப்பூர் ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருந்து உடனடியாக ஆயுதங்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Exit mobile version