Site icon Tamil News

ஸ்பெயினில் காட்டுத்தீ 4,000 ஹெக்டேர் எரிந்து நாசம்: 1,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

கிழக்கு ஸ்பெயினில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சுமார் 4,000 ஹெக்டேர் இயற்கை நிலப்பரப்பு எரிந்தது நாசமாகியுள்ளது.

இந்தக் காட்டுத்தீ காரணமாக அண்மித்த பகுதிகளில் வசித்த 1,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Castellon மற்றும் Teruel மாகாணங்களுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ, மெதுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சுற்றுப்புறத்தில் உள்ள எட்டு சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version