Site icon Tamil News

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தால் சுகாதார சேவை பாதிப்பை எதிர்நோக்குகிறது இங்கிலாந்து

இங்கிலாந்தில்  உள்ள இளம் வைத்தியர்களின் ஊதியம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நான்கு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த செயற்பாடானது அந்நாட்டின் சுகாதார சேவைக்கு முன்னோடியில்லாத இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும்,  இது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான இளம் வைத்தியர்கள், மருத்துவப் பணியாளர்களில் ஏறக்குறைய பாதியை உள்ளடக்கிய தகுதிவாய்ந்த மருத்துவர்கள் ஒன்றிணைந்து ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) 35 சதவீத உயர்வை கோருகின்றது.

Exit mobile version