Site icon Tamil News

வெளிநாடுகளில் 66 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களை சேமித்துவைத்துள்ள ரஷ்யா!

க்ரைன் – ரஷ்யா போரை தொடர்ந்து மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையின் அடிப்படை அஸ்திவாரங்கள் எவரும் நினைத்ததை விட வலிமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எங்களுடைய எதிரிநாடுகள் நாம் இரண்டு, மூன்று வாரங்களில் சரிந்துவிடுவோம் என எண்ணினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார தடைகள் இருந்தபோதும் கடந்த ஆண்டில் ரஷ்யா வெளிநாடுகளில் 66 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களை சேமித்து வைத்துள்ளதாக புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல்சார் செல்வம் ரொக்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடையே பரவுகிறது, ரஷ்யா அதன் ஏற்றுமதி மூலம் ஈட்டிய லாபத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது.

Exit mobile version