Site icon Tamil News

வீடுகளை பூட்டி வைக்குமாறும் ஆஸ்திரேலிய மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதன்படி, நத்தார் காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் இருபது வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது தமது சொத்துக்களை பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவு பயணங்களை மேற்கொள்வதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களை திருடர்கள் மிகவும் கவனமாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

வீட்டை விட்டு வெளியேறும்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

 

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் 2300க்கும் அதிகமான வீடு திருட்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

நகைகள், பணம் மற்றும் மொபைல் போன்கள் மிகவும் பிரபலமான திருடப்பட்ட பொருட்களாக பெயரிடப்பட்டுள்ளன.

 

இதன்காரணமாக மக்கள் தங்களுடைய பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version